Advertisement

சர்ச்சை புகைப்படம்...அமலாபாலை கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள்

By: Monisha Tue, 18 Aug 2020 11:03:42 AM

சர்ச்சை புகைப்படம்...அமலாபாலை கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள்

புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட அமலாபாலை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சிந்து சமவெளி சர்ச்சை படத்தில் அறிமுகமாகி பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக வளர்ந்த அமலாபால் திருமணம், விவாகரத்து என்றெல்லாம் பரபரப்பாகி மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர வைத்தார்.

தற்போது கதாநாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். சமீப காலமாக அமலாபால் சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார். இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற புகைப்படம் வந்தது.

photography,smoking,amala paul,fans,comment ,புகைப்படம்,புகைப்பிடித்தல்,அமலாபால்,ரசிகர்கள்,விமர்ச்சனம்

தற்போது புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் அதில் "எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல் இல்லை. எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை. எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை." என்ற தத்துவ பதிவையும் வெளியிட்டுள்ளார். புகைப்புடிக்கும் அமலாபாலுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் வலைத்தளத்தில் கண்டன பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Tags :
|