Advertisement

சர்தாருக்கு அப்புறமாக ஜப்பானாக களமிறங்கி உள்ளார் கார்த்தி

By: Nagaraj Mon, 14 Nov 2022 9:30:51 PM

சர்தாருக்கு அப்புறமாக ஜப்பானாக களமிறங்கி உள்ளார் கார்த்தி

சென்னை: ஜப்பான் ஸ்டார்ட்... ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஜப்பான். இந்தப்படத்தை ‘குக்கூ’ ‘ஜோக்கர்’ ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க இருக்கிறார்.

fans,shooting,japan,actor karthi,enthusiasm ,ரசிகர்கள், படப்பிடிப்பு, ஜப்பான், நடிகர் கார்த்தி, உற்சாகம்

இதுமட்டுமன்றி, புஷ்பா படத்தில் மங்களம் சீனு கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிய சுனில், ஒளிப்பதிவாளரும், கோலி சோடா', 'கடுகு' ஆகியத் திரைப்படங்களை இயக்கியவருமான இயக்குநர் விஜய்மில்டன் ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த அறிவிப்பு கார்த்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|