Advertisement

பிளடி ஸ்வீட் என்ற ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

By: Nagaraj Sun, 05 Feb 2023 10:00:04 PM

பிளடி ஸ்வீட் என்ற ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

சென்னை: நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியானது. இதையடுத்து ப்ரோமோவில் கூர்வாளை சாக்லேட்டால் நிரப்பி அதை தொட்டு ருசித்துப் பார்க்கும் போது பிளடி ஸ்வீட் என விஜய் பேசிய வசனத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக #BloodySweet ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த 30ம் தேதி இப்படத்திற்கான அறிவிப்பையும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களையும் தயாரிப்பு தரப்பு வெளியிட்டது. படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ள நிலையில், மற்ற தொழில் நுட்பகலைஞர்கள் குறித்த அப்டேட்களும் வெளியாகின.

இந்தப் படத்தின் அறிவிப்பை நீண்ட நாட்களாக படக்குழு வெளியிடாமலேயே இருந்தது. இந்நிலையில் படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பும், அடுத்த நாளில் பூஜை ஸ்டில்ஸ் உள்ளிட்டவையும் வெளியாகின. படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு லியோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.

vijay movie,trend,fans,dialogue,likes,chocolate ,விஜய் படம், டிரெண்ட், ரசிகர்கள், வசனம், லைக்ஸ், சாக்லேட்

இந்த வீடியோ மற்றும் டைட்டில் குறித்த அறிவுப்புகளை படத்தின் ஹீரோ விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். விஜய்யின் இந்த பகிர்வு வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே ஒரு மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.

இதேபோல லைக்ஸ்களும் ஏறக்குறைய 1 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதேபோல லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த பதிவு ஏறக்குறைய 7 லட்சம் வியூஸ்களையும் 75 ஆயிரம்லைக்ஸ்களையும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே பெற்றுள்ளது.

ப்ரோமோவில் கூர்வாளை சாக்லேட்டால் நிரப்பி அதை தொட்டு ருசித்துப் பார்க்கும் போது பிளடி ஸ்வீட் என விஜய் பேசிய வசனத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக #BloodySweet ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :
|
|
|