- வீடு›
- பொழுதுபோக்கு›
- மீண்டும் சீரியலுக்கு வாங்க... அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் வலியுறுத்தல்
மீண்டும் சீரியலுக்கு வாங்க... அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் வலியுறுத்தல்
By: Nagaraj Wed, 31 Aug 2022 11:51:35 AM
சென்னை: குவியும் கமெண்டுகள்... ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு கமெண்டுகள் குவிந்து வருகின்றன. அவர் மீண்டும் சீரியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ராஜா ராணி 2 சீரியலை விட்டு விஜே அர்ச்சனா விலகினார். இந்த தகவல் அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சீரியலில் ஆல்யா விலகிய பின்பு ரசிகர்கள் பலரும் அர்ச்சனாவின் நடிப்புக்காவே விடாமல் சீரியலை பார்த்து வந்தனர். ஆனால் கடைசியில் திடீரென்று அர்ச்சனா சீரியலுக்கு பாய் சொல்லிவிட்டார். அர்ச்சனாவின் இந்த முடிவை ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.
அதுமட்டுமில்லை இதற்கான காரணமும் தெரியாமல் குழம்பினர்.
அர்ச்சனாவுக்கு திருமணமா? வெள்ளித்திரையில் நடிக்க போகிறாரா? என ஏகப்பட்ட
கேள்விகள் ரசிகர்களுக்கு இருந்தது.
இதற்கு
பதில் சொல்லும் விதமாக அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் ஒன்றை
கொடுத்து இருந்தார்.அதில் புதிய பரிமாணத்தில் உங்களை சந்திக்கிறேன்
என்றார். ஆனாலும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. மீண்டும் சீரியலுக்கு
வரும்படி தொடர்ந்து கமெண்டுகளை பதிவு செய்து வந்தனர். அவரது ரோலில் இப்போது
ஈரமான ரோஜாவே அர்ச்சனா குமார் நடித்து வருகிறார். அவரின் என்ட்ரி
பற்றியும் குறிப்பிட்டு அர்ச்சனாவை மிஸ் செய்வதாக கூறி இருந்தனர்.
இந்நிலையில்
ராஜா ராணி 2 வில் கடைசியாக அர்ச்சனா நடித்த வளைக்காப்பு காட்சியின் போது
எடுக்கப்பட்ட புகைப்படத்தை அர்ச்சனா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படத்துடன் "நம்பிக்கை என்பது விழித்திருக்கும் கனவு" என
குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அர்ச்சனாவை மீண்டும்
சீரியலுக்கு வரும்படி அழைத்துள்ளனர். எந்த காரணத்திற்காக சீரியலை விட்டு
சென்று இருந்தாலும் சரி எங்களுக்காக மீண்டும் வாருங்கள் என கூறி
வருகின்றனர்.