Advertisement

ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு குறித்து படக்குழு தகவல்

By: Nagaraj Wed, 17 May 2023 10:40:03 PM

ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு குறித்து படக்குழு தகவல்

சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு குறித்த தகவலை ஜெயிலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் அண்ட் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

film,movie,song , இசை, ஜெயிலர், வெளியீட்டு விழா, படக்குழு

ஜெயிலர் நடிகர்கள் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக ரஜினி நடிக்கிறார்.

ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் வீடியோவை வெளியிட்ட படக்குழு, ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் இசை வெளியீடு குறித்த தகவலை ஜெயிலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூலை மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|