Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜவான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது

ஜவான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது

By: Nagaraj Sat, 01 Apr 2023 11:33:52 PM

ஜவான் படத்தின் படப்பிடிப்பு நிறைவு... அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது

மும்பை: ஜவான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் அட்லீயின் ஜவான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

jawan,movie,padhaan, ,ஜவான் படப்பிடிப்பு, தயார், ஷாருக்கான்

இந்தப் படத்துக்காக அட்லீ மூன்று வருடங்களாக மும்பையில் வசித்து வருகிறார். தற்போது ஷாருக்கானின் பதான் படத்தின் புரமோஷன்களை முடித்துவிட்டு மீண்டும் ஜவானில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஷாருக்கான்.

இப்படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|
|