Advertisement

ஜுராசிக் பார்க்-6ன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது

By: Nagaraj Wed, 17 June 2020 12:37:16 PM

ஜுராசிக் பார்க்-6ன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது

அடுத்த மாதத்தில் இருந்து ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் துவங்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஜுராசிக் பார்க்-ன் ஆறாம் பாகமான Jurassic World Dominion திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 6 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக யுனிவர்சல் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

shooting,universal,avatar-2,jurassic park,hollywood ,படப்பிடிப்பு, யுனிவர்சல், அவதார்-2, ஜுராசிக் பார்க், ஹாலிவுட்

கொரோனா தாக்கத்தால், ஏறத்தாழ 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹாலிவுட் படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க கடந்த வாரம் கலிபோர்னியா அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட திரைப்படங்களான அவதார்-ன் 2வது பாகம் மற்றும் Jurassic World Dominion-இன் படப்பிடிப்புகள் துவக்கப்பட உள்ளன.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் சுமார் 3000 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக யுனிவர்சல் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

Tags :