Advertisement

சக்திமான் தொடரை படமாக எடுக்கும் பணிகள் தொடக்கம்

By: Nagaraj Thu, 15 June 2023 11:48:01 AM

சக்திமான் தொடரை படமாக எடுக்கும் பணிகள் தொடக்கம்

மும்பை: சக்திமான் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் சினிமா படமாக எடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

சக்திமான் என்ற சூப்பர் ஹீரோ சீரியல் 90களில் தூர்தர்ஷனில் பல அத்தியாயங்களை ஒளிபரப்பி வெற்றி பெற்றது. இந்த தொடர் குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார்.

சக்திமான் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் சினிமா படமாக எடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதுகுறித்து முகேஷ் கன்னா கூறும்போது, “சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சினிமா படமாக உருவாகும்.

movie,ranveer singh,shaktiman,tv series , சக்திமான், டி.வி தொடர், படம், ரன்வீர் சிங்

இதுதொடர்பான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது” என்றார். இந்த படத்தில் சக்திமான் வேடத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

சக்திமானாக நான் நடிக்கவில்லை என்று முகேஷ் கன்னா தெரிவித்து விட்டார். சக்திமான் வேடத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

இந்த நிலையில் படக்குழுவினர் தற்போது ரன்வீர் சிங்கை அணுகி சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை தீபிகா படுகோனே கணவரான ரன்வீர் சிங் இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.

Tags :
|