Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... ரசிகர்கள் உற்சாகம்

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... ரசிகர்கள் உற்சாகம்

By: Nagaraj Sat, 01 Oct 2022 10:48:19 PM

பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... ரசிகர்கள் உற்சாகம்

ஐதராபாத்: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி கடந்த 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு பாகங்களாக வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர்.

முன்னதாக இவரது நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

first look,poster,prabhas,released,teaser tomorrow ,பர்ஸ்ட் லுக், போஸ்டர், பிரபாஸ், வெளியானது, நாளை டீசர்

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பிரபாஸுடன் கீர்த்தி சனோன், சைப் அலிகான் மற்றும் சன்னி சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியானது ராமரின் பிறப்பிடமான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடைபெற உள்ளது. ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் இந்த திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், பிரபாஸ் கையில் வில் அம்பை மேல் நோக்கி ஏந்தியவாறு பிடித்துள்ளார். நீளமான முடியுடன், முறுக்கு மீசையில் மாஸாக காட்சி அளிக்கிறார். ராமாயணத்தை மையாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags :
|