- வீடு›
- பொழுதுபோக்கு›
- துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது!
துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது!
By: Monisha Wed, 08 July 2020 11:46:40 AM
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூலை 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று அதாவது ஜூலை 8ஆம் தேதி 5 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வரும் இந்த படத்திற்கு ’96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.