Advertisement

விஜய் சேதுபதியின் 50வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செம வைரல்

By: Nagaraj Thu, 13 July 2023 7:27:04 PM

விஜய் சேதுபதியின் 50வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செம வைரல்

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படத்தை பிரபல ‘குரங்கு பொம்மை’ படத்தை தயாரித்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனிஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

50th movie,acting,look,poster,title,vijay sethupathi,viral, ,டைட்டில், நடிப்பு, போஸ்டர், லுக், 50-வது படம், விஜய் சேதுபதி, வைரல்

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் புருஷோத்தமன். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|
|
|