Advertisement

நானி நடிக்கும் டக் ஜெகதீஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

By: Nagaraj Sat, 26 Dec 2020 3:44:52 PM

நானி நடிக்கும் டக் ஜெகதீஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நானி படத்தின் அசத்தல் பர்ஸ்ட் லுக்... நடிகர் நானி நடித்துவரும் 'டக் ஜெகதீஷ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் நானி தமிழ் திரையுலகில் 'வெப்பம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'நான் ஈ' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

daman music,burstlook,nani movie,internet ,தமன் இசை, பர்ஸ்ட்லுக், நானி படம், இணையம்

இந்த படத்திற்கு பின் நானிக்கு ரசிகர் கூட்டங்கள் பெருகிவிட்டனர் . இதையடுத்து 2017 ஆம் ஆண்டு இயக்குனர் சிவா நிர்வணா மற்றும் நானி கூட்டணியில் வெளியான 'நின்னுக்கோரி' சூப்பர் ஹிட் அடித்தது.இந்நிலையில் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் 'டக் ஜெகதீஷ்'.

ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என கமர்ஷியல் திரைப்படமாக தயாராகி வரும் இந்த படத்தில் நடிகைகள் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

Tags :