- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் யோகி பாபு நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் யோகி பாபு நடிக்கும் பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
By: Nagaraj Mon, 09 Nov 2020 8:50:57 PM
பூச்சாண்டி படத்தின் பர்ஸ்ட் லுக்... தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே
அந்த வகையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு 'பூச்சாண்டி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை யோகி பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த டுவிட்டில், 'பேய்கள் முன்னேற்ற கழகம்' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் சேருபவர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன என்று அவர் காமெடியாக
குறிப்பிட்டுள்ளார்
கேஎஸ் சினிஷ் என்பவர் இயக்கும் இந்தப்
படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார் இந்த படத்தின்
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் அடுத்த மாதம் இந்த படம்
வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ஏற்கனவே நயன்தாரா உள்ளிட்ட முக்கிய நடிகைகளுடன் நடித்த யோகி பாபு தற்போது அஞ்சலியுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.