Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் பிரேம்ஜி நடிக்கும் சத்திய சோதனை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் பிரேம்ஜி நடிக்கும் சத்திய சோதனை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

By: Nagaraj Mon, 05 Oct 2020 10:00:33 AM

நடிகர் பிரேம்ஜி நடிக்கும் சத்திய சோதனை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் பிரேம்ஜியின் சத்திய சோதனை படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபுவின் தம்பி நடிகர் பிரேம்ஜி நடிக்கும் சத்திய சோதனை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.

sivakarthikeyan,premji,first look,truth test ,சிவகார்த்திகேயன், பிரேம்ஜி, பர்ஸ்ட் லுக், சத்திய சோதனை

விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பல புதுமுக நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். நடிகை ரேஷ்மா ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிராமங்களில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் போன்ற இடத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்திய கதை என்று சொல்லப்படும் இந்தப் படம் ஒரு காமெடி திரைப்படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.

இசையமைப்பாளர் ரகுராம் என்பவர் இசையமைத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் சத்திய சோதனை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் சில போலீஸ்காரர்கள் புடை சூழ நடுவே பிரேம்ஜி மற்றும் ஒரு பாட்டி உள்ளார்.

Tags :
|