Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பொருளாதாரத்தில் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நிவாரண உதவி

பொருளாதாரத்தில் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நிவாரண உதவி

By: Nagaraj Fri, 08 May 2020 3:52:43 PM

பொருளாதாரத்தில் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் நிவாரண உதவி

ஊரடங்கால் படப்பிடிப்புகள் முடங்கி போய் உள்ளன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஏற்பாட்டின்பேரில் பொருளாதாரத்தில் சரிந்த தயாரிப்பாளர்களுக்கு சென்னையில் 2 இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சினிமா துறையும் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதேவேளை சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சார்பில் உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பொருளாதாரத்தில் சரிந்து இருக்கும் சினிமா தயாரிப்பாளர்களுக்கு உதவக்கோரி நடிகர் ரஜினிகாந்திடம், தயாரிப்பாளர் சங்க முன்னாள் துணைத்தலைவர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

rajini,helped,damaged producers,relief products ,ரஜினி, உதவினார், நலிந்த தயாரிப்பாளர்கள், நிவாரணப் பொருட்கள்

இந்த வேண்டுகோளை ஏற்று 1,000 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். இந்த பொருட்கள் சென்னை அண்ணாசாலை பிலிம் சேம்பர் வளாகத்தில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து பொருளாதாரத்தில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு 20 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை கே.ராஜன் வழங்கினார். தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி முக கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் ஜாக்குவார் தங்கம், திருமலை, சவுந்தர், ஜெமினி ராகவா, ஜோதி பாலாஜி, கவுரி மனோகர், கே.எஸ்.சிவராமன், வின்னர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
|
|