- வீடு›
- பொழுதுபோக்கு›
- சூரரைப்போற்று திரைப்படத்தின் நாலு நிமிஷம் லிரிக் விடியோ!
சூரரைப்போற்று திரைப்படத்தின் நாலு நிமிஷம் லிரிக் விடியோ!
By: Monisha Fri, 06 Nov 2020 4:54:24 PM
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்ற 'நாலு நிமிஷம்' என்ற லிரிக் விடியோ இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷின் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சூரரைப்போற்று படத்தின் பாடல்கள், வீடியோ லிரிக் பாடல்கள், டிரைலர் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.