Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வித்தியாசமான பரிசு வழங்கிய நண்பர் மோகன்பாபு!

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வித்தியாசமான பரிசு வழங்கிய நண்பர் மோகன்பாபு!

By: Monisha Tue, 25 Aug 2020 10:31:49 AM

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு வித்தியாசமான பரிசு வழங்கிய நண்பர் மோகன்பாபு!

பிரபல தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அவருக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

குறிப்பாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ரவிதேஜா, மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் உள்பட பலர் சமூக வலைதளங்கள் மூலம் சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்பாபு வித்தியாசமான பரிசு ஒன்றை தனது நண்பர் சிரஞ்சீவிக்கு அளித்து உள்ளார்.

mega star,chiranjeevi,birthday,gift,mohanbabu ,மெகா ஸ்டார்,சிரஞ்சீவி,பிறந்தநாள்,பரிசு,மோகன்பாபு

அவர் முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக் ஒன்றை சிரஞ்சீவிக்கு அளித்துள்ளார். இந்த பைக்கைப் பார்த்து சிரஞ்சீவி ஆச்சரியமடைந்து, இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் இந்த பைக்கின் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். மேலும் வித்தியாசமான பரிசு வழங்கிய நண்பர் மோகன்பாபுவுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக்குடன் சிரஞ்சீவி நிற்கும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags :
|