Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இனிமேல் படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் கலக்க இருக்கிறார் லோகேஷ்

இனிமேல் படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் கலக்க இருக்கிறார் லோகேஷ்

By: vaithegi Tue, 28 Nov 2023 3:02:00 PM

இனிமேல் படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் கலக்க இருக்கிறார் லோகேஷ்


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து இத்திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பெரும் ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக அவர் ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இதன் இடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவர் புதிதாக தொடங்கியுள்ள இத்தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘GSquad’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் நேற்று லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக யார் நடிக்கும் படத்தை தயாரிக்க போகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் முதன் முதலாக ரத்னகுமார் இயக்கும் ஒரு படத்தை தான் தயாரிக்கவுள்ளாராம். ரத்னகுமார் கடைசியாக குளு குளு எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் எழுதிய கதை ஒன்றை படமாக இயக்கவுள்ளார்.

lokesh,producer ,லோகேஷ் , தயாரிப்பாளர்


ரத்னகுமார் இயக்கும் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளாராம், அதைப்போலவே நயன்தாராவும் அப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே, தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் பிசியாக இருப்பதால் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி அடுத்த படத்திற்கான அப்டேட்டுடன் வருகிறேன் என ரத்னகுமார் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

எனவே, அவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்திரைப்படத்தை தான் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த முதல் படம் எப்படி இருக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

Tags :
|