Advertisement

செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட முழு நீள படம் "அகண்டன்"

By: Nagaraj Mon, 02 Nov 2020 8:41:52 PM

செல்போன் கேமராவில் எடுக்கப்பட்ட முழு நீள படம் "அகண்டன்"

செல்போனிலேயே படத்தை எடுத்து முடித்து சாதித்துள்ளனர் அகண்டன் படக்குழுவினர்.

30 நடிகர், நடிகைகளை வைத்து, இந்தியா தவிர 2 மேலை நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தி ஒரு முழு நீள சினிமாவை கைக்குள் அடங்கி இருக்கும் செல்போனில் படம் பிடித்திருக்கிறார்கள்.படத்தின் பெயர் 'அகண்டன்': படத்தை இயக்கி இருப்பவர் சந்தோஷ் நம்பிராஜன்.

இவர் ஒளிப்பதிவாளர், டைரக்டர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர். ஏற்கெனவே 'டு லெட்' என்னும் படத்தில் நடித்து அதனை இயக்கியவர். இந்தப் படம் தேசிய விருதைப் பெற்றதோடு பல்வேறு சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது

'அகண்டன்' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு ஆகிய பணிகளோடு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். ஹரிணி பிரசன்னா என்பவர் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

shooting,cell phone,full movie,fight scenes,adventure ,படப்பிடிப்பு, செல்போன், முழு படம், சண்டைக்காட்சிகள், சாதனை

தமிழ் சினிமாவில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். செல்போன் கேமரா மூலம் ஒரு முழு நீள படத்தை எடுத்தால் என்ன என்று யோசித்தேன். ஐ போன் 11 புரோ மொபைல் கேமரா மூலம் முழு படத்தையும் படம் பிடித்திருக்கிறேன். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறேன்.

சீனாவைச் சேர்ந்த நடிகர் யமீன் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் சிங்கப்பூரில் அவர் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் படத்தில் பேசும்படி இருக்கும் என்று உறுதிபடக் கூறினார். மொத்தம் நடிகர் நடிகைகள் 30 பேர். இதில் மூன்று நாடுகளை சேர்ந்த துணை நடிகர்களும் இருக்கிறார்கள்.

கொரோனா காலத்தில் படப்பிடிப்பு தொடர்பாக அரசு விதித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறோம்'' என்றார்.

Tags :