Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • திருட்டு இணையதளத்தில் வெளியாகிய மூக்குத்தி அம்மன் முழு படம் - படக்குழுவினர் அதிர்ச்சி

திருட்டு இணையதளத்தில் வெளியாகிய மூக்குத்தி அம்மன் முழு படம் - படக்குழுவினர் அதிர்ச்சி

By: Monisha Mon, 16 Nov 2020 11:28:47 AM

திருட்டு இணையதளத்தில் வெளியாகிய மூக்குத்தி அம்மன் முழு படம் - படக்குழுவினர் அதிர்ச்சி

திருட்டு இணையதளத்தில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் முழு படமும் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திருட்டு இணையதளங்களில் தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்களும் தற்போது திருட்டு இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. சூர்யா நடித்து கடந்த 12-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியான சூரரை போற்று படம் சில மணி நேரத்திலேயே திருட்டு இணையதளத்திலும் வெளியானது.

theft website,mookuthi amman,film crew,shock,ott site ,திருட்டு இணையதளம்,மூக்குத்தி அம்மன்,படக்குழுவினர்,அதிர்ச்சி,ஓடிடி தளம்

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையில் ஓடிடி தளத்தில் ரிலீசான நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படமும் திருட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. பக்தி படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். ஓ.டி.டி. தளத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே மூக்குத்தி அம்மன் முழு படத்தையும் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு இணையதளங்கள் அடிக்கடி முகவரியை மாற்றுவதால் அதை தடுப்பது சவாலாக உள்ளது.

Tags :
|