Advertisement

உடல் எடையை பாதியாக குறைத்து அசத்திய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா

By: Nagaraj Thu, 17 Dec 2020 9:19:48 PM

உடல் எடையை பாதியாக குறைத்து அசத்திய நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா

லாக்டவுன் காலத்தில் தன் உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் பாலிவுட் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.

பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனரான கணேஷ் ஆச்சார்யா. இவரை பார்ப்பவர்கள் இவரால் எப்படி இவ்வளவு பெரிய உடலை வைத்து அநாயசமாக நடனமாடுகிறார் என்று சொல்வார்கள். இந்நிலையில் தனது உடல் எடையை பாதியாக குறைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

choreographer,ganesh acharya,internet,viral,body weight ,
நடன இயக்குனர், கணேஷ் ஆச்சார்யா, இணையம், வைரல், உடல் எடை

பாலிவுட்டில் பட்டாசாய் நடனம் அமைக்கும் நடன இயக்குனர்களில் கணேஷ் ஆச்சார்யாவும் ஒருவர். அவரின் மற்றொரு சிறப்பம் 150 கிலோவுக்கு மேல் உள்ள அவரது பருமனான உடலை வைத்துக் கொண்டு அவர் எல்லா கடினமான நடன அசைவுகளையும் எளிதில் ஆடுவதுதான்.

இதை நடன இயக்குனர் பிரபுதேவா கூட பலமுறை பாராட்டியுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி தனது உடல் எடையை பயங்கரமாகக் குறைத்துள்ளார் கணேஷ் ஆச்சார்யா. கிட்டத்தட்ட 50 கிலோ எடை குறைத்துள்ள அவரின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|