Advertisement

கொரோனா வைரஸ் குறித்த டாக்குமெண்டரி படத்தை உருவாக்கிய கவுதம் மேனன்!

By: Monisha Tue, 07 July 2020 12:03:40 PM

கொரோனா வைரஸ் குறித்த டாக்குமெண்டரி படத்தை உருவாக்கிய கவுதம் மேனன்!

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பலியாகியும் வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு குறும்படங்கள் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் கவுதம் மேனன், கொரோனா வைரஸ் குறித்த டாக்குமெண்டரி படம் ஒன்றை டிஸ்கவரி சேனலுக்காக உருவாக்கி உள்ளார்.

corona virus,awareness,documentary,discovery,gautam menon ,கொரோனா வைரஸ்,விழிப்புணர்வு,டாக்குமெண்டரி,டிஸ்கவரி,கவுதம் மேனன்

"COVID-19: India’s War Against The Virus" என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த குறும்படம் ஜூலை மாதம் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளதை போல், ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய் அவர்கள் இயக்கி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு, ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் நன்மைகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் இந்த குறும்படத்தில் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :