Advertisement

திருமணத்திற்கு தயாராகிட்டார்... மெஹந்தி விழாற்கு தயாரான ஹன்சிகா

By: Nagaraj Fri, 02 Dec 2022 11:23:27 AM

திருமணத்திற்கு தயாராகிட்டார்... மெஹந்தி விழாற்கு தயாரான ஹன்சிகா

மும்பை: மெஹந்தி விழாவிற்கு தயாரான வீடியோ... நடிகை ஹன்சிகா மற்றும் அவரது வருங்கால கணவர் சோஹாய் ஆகியோர் கையில் மருதாணியுடன் மெஹந்தி விழாவிற்கு தயாராகும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார் நடிகை ஹன்சிகா. இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் ஹன்சிகாவுக்கு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

சோஹைல் கதுரியா என்ற தொழிலதிபரை மணக்கப் போகிறார். கடந்த மாதம் ஹன்சிகா தனது வருங்கால கணவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன் அவருடன் காதல் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

hansika,traditional way,wedding,wedding,mehndi ceremony,hansika-sohail khaturia ,திருமணம், மெஹந்தி விழா, ஹன்சிகா-சோஹைல் கதுரியா

திருமணத்திற்கு இன்று இரண்டு நாட்களே உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஹன்சிகா-சோஹைல் கதுரியா ஜோடியின் மெஹந்தி விழா நேற்று நடக்கிறது. இதற்காக ஹன்சிகாவும் சோஹாவும் கையில் மருதாணியுடன் தயாராகும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாரம்பரிய முறைப்படி ஹன்சிகான் திருமணம் நடைபெற உள்ளது. இவரது திருமண வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை ஒரு முன்னணி OTT தளம் பல கோடி கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களது திருமணத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிகிறது.

Tags :