Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஜி.பி. முத்துவுக்கு என்னாச்சு... மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரல்

ஜி.பி. முத்துவுக்கு என்னாச்சு... மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரல்

By: Nagaraj Mon, 17 Apr 2023 10:15:42 PM

ஜி.பி. முத்துவுக்கு என்னாச்சு... மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரல்

சென்னை: ஜி.பி. முத்துக்கு என்னாச்சு... ஜிபி முத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவருக்கு டிக்டாக்கில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் முதல் போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார். முதல் வாரத்திலேயே மக்களின் பேவரைட் போட்டியாளராக மாறினார்.

ஆனால் இரண்டாவது வாரம் தொடங்கியதில் இருந்தே தான் வீட்டுக்கு சென்று தனது மகனை பார்க்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து வெளியேறினார். தற்போது, குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

information,gp muthu,health,hospital,admission,soon ,தகவல்கள், ஜி.பி.முத்து, உடல்நிலை, மருத்துவமனை, அனுமதி, விரைவில்

இந்நிலையில், திடீரென மருத்துவமனையில் அட்மிட்டாகியுள்ள ஜிபி முத்துவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. படுத்த படுக்கையாக பெட்டில் இருக்கும் ஜிபி முத்துவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனது இன்ஸ்டாவில் ஃபோட்டோவை ஷேர் செய்த ஜிபி முத்து வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு என்ன ஆனது என அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விரைவில் இவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|