Advertisement

ஜிவி பிரகாஷின் அடுத்த சர்வதேச ஆல்பம் நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸ்!

By: Monisha Thu, 12 Nov 2020 6:38:07 PM

ஜிவி பிரகாஷின் அடுத்த சர்வதேச ஆல்பம் நவம்பர் 19ஆம் தேதி ரிலீஸ்!

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சர்வதேச ஆல்பம் சமீபத்தில் 'கோல்ட் நைட்ஸ்' என்ற பெயரில் வெளியானது. அந்த ஆல்பம் மிகப்பெரிய அளவில் வைரலானது. ஜிவி பிரகாஷ் மற்றும் ஜூலியா கர்தா ஆகிய இருவரும் இணைந்து பாடிய அந்தப் பாடல் உலக அளவில் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'கோல்டு நைட்ஸ்' பாடலை அடுத்து தற்போது 'கிரையிங் நைட்' என்ற ஆங்கில ஆல்பத்தை ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார். முந்தைய ஆங்கில ஆல்பத்தில் இணைந்த ஜூலியா கர்தா இந்த ஆல்பத்திலும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்துள்ளார் .

gv prakash,international album,crying night,julia karta,dhanush ,ஜிவி பிரகாஷ்,சர்வதேச ஆல்பம்,கிரையிங் நைட்,ஜூலியா கர்தா,தனுஷ்

அதேபோல் ஜிவி பிரகாஷின் முந்தைய ஆங்கில ஆல்பத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நடிகர் தனுஷ், இந்த ஆல்பத்தை நவம்பர் 19ஆம் தேதி மாலை ரிலீஸ் செய்யவுள்ளார். இந்த தகவலை ஜீவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் தற்போது சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் 'தலைவி' உள்பட ஒருசில படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :