Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • மூன்று பாடல்களை கம்போஸ் பண்ணியாச்சு... தனுஷின் 43வது படம் குறித்து ஜிவி பிரகாஷ்!

மூன்று பாடல்களை கம்போஸ் பண்ணியாச்சு... தனுஷின் 43வது படம் குறித்து ஜிவி பிரகாஷ்!

By: Monisha Wed, 02 Dec 2020 3:59:51 PM

மூன்று பாடல்களை கம்போஸ் பண்ணியாச்சு... தனுஷின் 43வது படம் குறித்து ஜிவி பிரகாஷ்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'கர்ணன்' திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தற்போது 'அத்ராங்கே' என்ற பாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் தனுஷின் 43 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்றும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியது.

gv prakash,songs,compos,dhanush,album ,ஜிவி பிரகாஷ்,பாடல்கள்,கம்போஸ்,தனுஷ்,ஆல்பம்

இந்த நிலையில் தற்போது தனுஷின் 43வது படத்திற்கு மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் நான்காவது பாடலையும் கம்போஸ் செய்யும் பணியில் தற்போது இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த தகவல் காரணமாக தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் இந்த படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகும் என்றும் அந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்றும் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். பாலிவுட் திரைப்படமான 'அத்ராங்கே' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் 'தனுஷ் 43' படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|