Advertisement

அறிமுக இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம்

By: Monisha Fri, 09 Oct 2020 12:51:21 PM

அறிமுக இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம்

அகிலன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். அதில் அவர் நடித்து முடித்த ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மற்ற படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை அகிலன் என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

gv prakash,akilan,filming,tamil cinema ,ஜிவி பிரகாஷ்,அகிலன்,படப்பிடிப்பு,தமிழ் சினிமா

கதாநாயகனாக நடிப்பது மட்டுமின்றி இந்த படத்துக்கு இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ். ராஜதுரை ஒளிப்பதிவில் சிவாநந்தீஸ்வரர் படத்தொகுப்பில், ஸ்டண்ட் மணியின் ஸ்டன்ட் இயக்கத்தில் தாமு கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை நவீரா சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|