Advertisement

பிக் பாஸ் ஓவியாவின் ரசிகர்களுக்கு ஹேப்பிநியூஸ்..

By: Monisha Fri, 15 July 2022 8:00:06 PM

பிக் பாஸ் ஓவியாவின்  ரசிகர்களுக்கு ஹேப்பிநியூஸ்..

பிக் பாஸ் புகழ் நடிகை ஓவியா திடீரென்று சின்னத்திரை பக்கம் கவனத்தை செலுத்தியுள்ளார் என தகவல்.இந்த முறை அவர் களத்தில் இறங்கி இருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில்.மலையாளத்தில் கங்காரு என்ற படத்தில் நடித்த பின்பு நடிகை ஓவியா தமிழில் களவாணி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மொத்த தமிழ் குடும்பங்களின் மனதிலும் ஓவியா இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவின் பெயர் வேற லெவலில் ரீச் ஆனது. இதனைத்தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்தார். இவரின் நடிப்பில் அடுத்தது, பூமர் அங்கிள் என்ற திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.

oviya,fans,happy,dance ,ஓவியா, ரசிகர்கள்,ஜீ  தமிழ்,           
 தொலைக்காட்சி,

ரசிகர்கள் தொடர்ந்து ஓவியாவிடம் நிறைய படங்களை எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஓவியா திடீரென்று சின்னத்திரை பக்கம் கவனத்தை செலுத்தியுள்ளார். கூடிய விரைவில் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் ஓவியா நடுவராக இடம் பெறுகிறார் என கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ஷூட்டிங் முடிந்து புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகை சினேகா, நடிகை சங்கீதா ஆகியோரும் உள்ளனர், இவர்களுடன் நடிகை ஓவியாவும் நடுவராக இருக்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|