Advertisement

லியோ படத்தின் ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இன்று வெளியீடு

By: vaithegi Tue, 15 Aug 2023 3:38:23 PM

லியோ படத்தின் ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இன்று வெளியீடு


லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி கொண்டு வருகிறார். எனவே இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடை பெற்றன. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதனை அடுத்து இந்தப் படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வருகிற அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

harald das,leo , ஹரால்டு தாஸ்,லியோ

இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இன்று மாலை அறிமுகமாகும் என்று படக்குழு அறிவித்து உள்ளது.

இதையடுத்து நடிகர் அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள். அவர்தான் ஹரால்டு தாஸாக நடித்து உள்ளதாக தெரிகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாத்திரம் அறிமுகம் செய்யப்படுகிறது.

Tags :