Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போன்று புதுப்பந்துகளை பயன்படுத்தலாம் - ஹர்பஜன் சிங் ஆலோசனை

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போன்று புதுப்பந்துகளை பயன்படுத்தலாம் - ஹர்பஜன் சிங் ஆலோசனை

By: Monisha Wed, 20 May 2020 5:18:20 PM

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போன்று புதுப்பந்துகளை பயன்படுத்தலாம் - ஹர்பஜன் சிங் ஆலோசனை

கொரோனா வைரஸ் தொற்று வீரர்களுக்கு இடையில் பரவி விடக்கூடாது என்பதற்காக ஐசிசி பல்வேறு புதிய விதிமுறைகளை அறிவித்து உள்ளது.உள்ளது.

போட்டியின்போது பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘எச்சில்’ பயன்படுத்தாவிடில் பந்து ஷைனிங் தன்மையை உடனடியாக இழந்துவிடும். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் திணற வேண்டியிருக்கும். இது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகிவிடும்.

harbhajan singh,icc,cricket,corona virus,fast bowlers ,ஹர்பஜன் சிங்,ஐசிசி,கிரிக்கெட்,கொரோனா வைரஸ்,வேகப்பந்து வீச்சாளர்கள்

இதனால் இரண்டு பக்கத்திலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போன்று புதுப்பந்துகளை பயன்படுத்தலாம் என ஹர்பஜன் சிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘இரண்டு பக்கத்திலும் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்த முடியும். ஒரு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். மற்றொரு பந்தை ஸ்விங் செய்ய முடியும். இரண்டு பந்துகளையும் 90 ஓவர்கள் வரை பயன்படுத்தக் கூடாது. 50 ஓவர்களுக்குப்பின் பந்துகளை மாற்ற வேண்டும். ஏனென்றால் இரண்டு பந்துகளும் 50 ஓவர்களில் பழையதாகிவிடும்.’’ என்றார்.

இதற்கிடையில் பந்தை பளபளப்பாக்க வியர்வையை பயன்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.

Tags :
|