Advertisement

இத்தாலியில் சொகுசு வில்லா வாங்கியுள்ளாரா நடிகர் பிரபாஸ்?

By: Nagaraj Sun, 25 June 2023 10:58:15 PM

இத்தாலியில் சொகுசு வில்லா வாங்கியுள்ளாரா நடிகர் பிரபாஸ்?

ஐதராபாத்: பிரபாஸ் தான் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்க பயன்படுத்துவதாகவும், இத்தாலியில் சொகுசு வில்லா ஒன்றை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸின் மார்க்கெட் உயர்ந்தது. இவரை வைத்து ரூ.500 கோடி மற்றும் ரூ.600 கோடி என்றெல்லாம் செலவு செய்து பிரமாண்ட படங்களை உருவாக்குகிறார்கள். பிரபாஸுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருப்பதால், அவரது படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகின்றன.

actor,italy,luxury,prabhas,villa, ,இத்தாலி, சொகுசு, நடிகர், பிரபாஸ், வில்லா

ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் படத்தில் ராமனாக நடித்த பிரபாஸ் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால் எதிர்ப்பையும் மீறி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

இந்நிலையில் பிரபாஸ் தான் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்க பயன்படுத்துவதாகவும், இத்தாலியில் சொகுசு வில்லா ஒன்றை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜெட் விமானத்தில் நண்பர்களுடன் இத்தாலி சென்று அந்த சொகுசு பங்களாவில் ஓய்வெடுப்பார். இந்த வில்லாவை சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு வாடகைக்கு விடுவதால் அவருக்கு மாத வாடகையாக ரூ.40 லட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
|
|
|
|