- வீடு›
- பொழுதுபோக்கு›
- மும்பையிலேயே குடியேறிவிட்டாரா சூர்யா... கோலிவுட்டில் பரபரப்பு தகவல்
மும்பையிலேயே குடியேறிவிட்டாரா சூர்யா... கோலிவுட்டில் பரபரப்பு தகவல்
By: Nagaraj Wed, 01 Mar 2023 11:34:50 PM
சென்னை: சூர்யா தன் குடும்பத்தை கண்டு கொள்வதே கிடையாதாம். குறிப்பாக தற்போது சென்னையை விட்டு வெளியேறி மும்பையில் சொந்த வீடு வாங்கி குடியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா தற்போது நடிப்பை தாண்டி தனது சொந்த தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி பல தொழில்கள் செய்து வரும் அவர் மும்பை விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தை ஏலம் எடுத்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். அதைத் தொடர்ந்து வேறு சில தொழில்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதனால்தான் இப்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சென்னையில் ஷூட்டிங் இருக்கும்போது மட்டும் அப்பா வீட்டிலேயே இருந்துவிட்டு படப்பிடிப்பை முடித்துவிட்டு உடனே பறந்துவிடுவார். இது தவிர அவர் மும்பையில் செட்டிலாவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
அதாவது சூர்யாவை பாலிவுட்டில் முன்னணி நடிகராக்க ஜோதிகா விரும்புகிறார். சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்க்கை தயாரித்து வருகிறார். அவரும் இதில் கேமியோ ரோலில் நடிக்கிறார்.
இதுதான் ஜோதிகாவின் பாலிவுட் கனவுக்கு அடித்தளம். இதையடுத்து சூர்யாவை ஹிந்தி திரை உலகில் கால்பதிக்க தேவையான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். ஆனால் சிவகுமாருக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை.
சூர்யா மனைவி பேச்சை கேட்டு டான்ஸ் ஆடுவது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மூத்த மருமகளால் சிவக்குமாரின் குடும்பம் இரண்டாகப் பிரிந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.