Advertisement

பிச்சைக்காரன் -2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதா?

By: Nagaraj Wed, 29 Mar 2023 11:30:41 PM

பிச்சைக்காரன் -2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதா?

சென்னை: பிச்சைக்காரன்-2 படம் மே 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்டது.

movie,pitchaikaran,vijay antony, ,ட்விட்டர், பிச்சைக்காரன்-2, விஜய் ஆண்டனி

படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பிச்சைக்காரன் 2 தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது இப்படம் மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|