Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சிவகார்த்திகேயனின் ஓடிடி தளத்தை வாங்க முடிவு செய்துள்ளரா உதயநிதி ஸ்டாலின்?

சிவகார்த்திகேயனின் ஓடிடி தளத்தை வாங்க முடிவு செய்துள்ளரா உதயநிதி ஸ்டாலின்?

By: Nagaraj Thu, 07 July 2022 7:49:08 PM

சிவகார்த்திகேயனின் ஓடிடி தளத்தை வாங்க முடிவு செய்துள்ளரா உதயநிதி ஸ்டாலின்?

சென்னை: சிவகார்த்திகேயனின் ஓடிடி தளத்தை தானே வாங்க முடிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


உதயநிதி ஸ்டாலின் நடிப்பதையும் தாண்டி பல திரைப்படங்களை தயாரித்தும் வந்தார். தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பல திரைப்படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.


முக்கியமாக சமீபத்தில் வெளியான விஜயின் பீஸ்ட், உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட திரைப்படங்களை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து திரையரங்கு விநியோகஸ்தராக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே அண்மையில் சிவகார்த்திகேயன், ஓடிடி தளம் ஒன்றை உருவாகியுள்ளதாகவும், இத்தளத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் திரைப்படங்களை வாங்கி தனது சொந்த ஓடிடியில் வெளியிட்டு மக்களுக்கு ஒளிபரப்பவும் சிவகார்த்திகேயன் முடிவு செய்திருந்தார்.

satellite,ownership,sivakarthikeyan,endorsement,udayanidhi,ott platform ,சாட்டிலைட், உரிமை, சிவகார்த்திகேயன், ஒப்புதல், உதயநிதி, ஓடிடி தளம்

அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில், தற்போது இந்த ஓடிடி தளத்தினை உதயநிதி ஸ்டாலின் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக உதயநிதி ஸ்டாலின் வினியோகம் செய்யும் திரைப்படங்களை ஓடிடி தளத்தில் அப்லோட் செய்து, பிஸ்னஸ் பார்க்க உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் பல திரைப்படங்கள் அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் விற்கப்பட்டு மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இதனை நன்கறிந்த உதயநிதி ஸ்டாலின் இந்த வியாபார உத்தியை பயன்படுத்தி சிவகார்த்திகேயனின் ஓடிடி தளத்தை தானே வாங்க முடிவு செய்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயனும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் திரையரங்குகளுக்கு வினியோகம் செய்யும் திரைப்படங்களை சாட்டிலைட் ரைட்ஸ் உரிமை வாங்கி வரும் நிலையில் தற்போது ஓடிடி தளத்தையும் சொந்தமாக வாங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :