Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஆயிரம் ரூபாய்தான் அட்வான்ஸ் வாங்கினார்... இயக்குனர் சங்கர் கூறிய தகவல்

ஆயிரம் ரூபாய்தான் அட்வான்ஸ் வாங்கினார்... இயக்குனர் சங்கர் கூறிய தகவல்

By: Nagaraj Tue, 21 June 2022 6:24:53 PM

ஆயிரம் ரூபாய்தான் அட்வான்ஸ் வாங்கினார்... இயக்குனர் சங்கர் கூறிய தகவல்

சென்னை: சிவாஜி படத்தில் ரூ.1000ம் தான் அட்வான்ஸ் வாங்கினார் நடிகர் ரஜினிகாந்த் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சிவாஜி திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் மெகா ஹிட் அடித்தது. விவேக் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலக்கியிருந்தார். ஆக்டிங்கில் புதிய டிரெண்டிங்கை செட் செய்த ரஜினிகாந்துக்கு, இந்தப் படம் புதிய திருப்பு முனையாக அமைந்தது. அவருடைய திரைப்பட கேரியரிலும் புதிய உட்சத்தை எட்ட சிவாஜி திரைப்படம் உதவியது.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், சிவாஜி திரைப்படம் வெளியாகி 15வது ஆண்டுகள் எட்டியுள்ளதையும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்காக இயக்குநர் சங்கர், தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் சரணவன் உள்ளிட்டோர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தனர். அப்போது, அனைவரும் சேர்ந்து சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடினர். தற்போது படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவலை இயக்குநர் சங்கர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

shivaji film,rs 1,000,advance,rs 18 crore salary,shankar ,சிவாஜி படம், ஆயிரம் ரூபாய், அட்வான்ஸ், ரூ.18 கோடி சம்பளம், சங்கர்

சிவாஜி படத்துக்கு 18 கோடி ரூபாய் ஊதியமாக பெற்ற ரஜினிகாந்த், அட்வான்ஸ் தொகையாக வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும், சூட்டிங்கின்போது காயமடைந்த ரஜினிகாந்த், அதனை இயக்குநர் சங்கரிடம் தெரிவிக்கவில்லை. அவரும் அடுத்த காட்சிகளை எடுப்பதில் முழுக் கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

அந்தநேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் சூப்பர் ஸ்டாருக்கு காயம் ஏற்பட்டதை தெரிவிக்க, அதன்பிறகு சூட்டிங்கை நிறுத்தியுள்ளார் சங்கர். ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னரே அடுத்தடுத்த காட்சிகளை எடுத்ததாகவும் சங்கர் கூறியுள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு 18 கோடி ரூபாய் ஊதியம் பெற்ற சூப்பர் ஸ்டாரின் சம்பளம் இன்று 100 கோடி ரூபாயைக் கடந்திருக்கிறது. அதற்கு சிவாஜியும் ஒரு காரணம்.

Tags :
|
|