Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அவர் அழைத்தார்... எனக்கு செட் ஆகாது என்று சொல்லிட்டேன்: நடிகர் அப்பாஸ் தகவல்

அவர் அழைத்தார்... எனக்கு செட் ஆகாது என்று சொல்லிட்டேன்: நடிகர் அப்பாஸ் தகவல்

By: Nagaraj Fri, 04 Aug 2023 11:37:54 PM

அவர் அழைத்தார்... எனக்கு செட் ஆகாது என்று சொல்லிட்டேன்: நடிகர் அப்பாஸ் தகவல்

சென்னை: கமல்ஹாசன் போன் செய்து அழைத்தும் பிக் பாஸ் வர மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் அப்பாஸ். இதை அவரே தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஷோவை கடந்த ஆறு வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்து 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை சேனல் செய்ய தொடங்கி இருக்கிறது.

இந்த வருடம் பிக் பாஸில் யாரெல்லாம் போட்டியாளராக வர போகிறார்கள் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

it will not be set,abbas,actor kamal,bigg boss,called ,செட் ஆகாது, அப்பாஸ், நடிகர் கமல், பிக்பாஸ், போன் செய்தார்

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் இத்தனை வருடங்கள் வெளிநாட்டில் இருந்த நிலையில் தற்போது சென்னைக்கு திரும்பி பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க தொடங்கி இருக்கிறார்.

தன்னை பிக் பாஸ் வரும்படி கமல்ஹாசன் போன் செய்து அழைத்தார், ஆனால் அது எனக்கு செட் ஆகாது என கூறி மறுத்துவிட்டேன் என அப்பாஸ் கூறி இருக்கிறார்.

Tags :
|