Advertisement

அவருக்கு ரூ.20 ஆயிரம்... இப்போ இவருக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாம்

By: Nagaraj Thu, 05 Oct 2023 4:30:48 PM

அவருக்கு ரூ.20 ஆயிரம்... இப்போ இவருக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாம்

சென்னை: அவர் வாங்கிய சம்பளம் ரூ.20 ஆயிரம், இப்போ இவருக்கு ரூ.40 ஆயிரம் சம்பளம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இவருடைய மறைவுக்குப்பின் வேறு யார் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

பல நடிகர்களின் பெயர்கள் உலா வந்தாலும், முதலில் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்க போகிறார் என தகவல் வெளிவந்தது.

salary,adi gunasekaran,vela.ramamurthy,information,counterswimming ,சம்பளம், ஆதி குணசேகரன், வேல.ராமமூர்த்தி, தகவல், எதிர்நீச்சல்

ஆனால், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை முதலில் வேல ராமமூர்த்தி மறுத்துள்ளாராம். தொடர்ந்து படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியபின் ஆதி குணசேகரனாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

அதன்படி ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்த காட்சிகள் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாக உள்ளது. ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகர் மாரிமுத்து ரூ. 20,000 சம்பளமாக வாங்கி வந்துள்ளார்.

ஆனால், தற்போது அதே கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு நடிகர் வேல ராமமூர்த்தி ரூ. 40,000 சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|