Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கமலுடன் இணைந்து தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி

கமலுடன் இணைந்து தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி

By: Nagaraj Fri, 08 May 2020 3:52:51 PM

கமலுடன் இணைந்து தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கிறாராம் விஜய் சேதுபதி

கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார் நடிகர் விஜய்சேதுபதி என்று கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

கதாநாயகனாக பெயர் வாங்கிய விஜய் சேதுபதி மற்ற நடிகர்கள் படங்களிலும் இமேஜ் பார்க்காமல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடிக்கிறார். மாதவனின் விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லனாக வந்தார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

vijay sethupathi,kamal,is the leader and plays the role ,விஜய் சேதுபதி, கமல், தலைவன் இருக்கிறார், நடிக்கிறார்

அவரது கைவசம் மாமனிதன், லாபம், ரண சிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளர், துக்ளக் தர்பார், காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் உப்பென்னா, இந்தியில் லால் சிங் சதா ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் அவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் -2 படத்தை முடித்து விட்டு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். தேவர் மகன் இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|