Advertisement

வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறாம் இவர்

By: vaithegi Mon, 06 Nov 2023 12:20:49 PM

வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறாம் இவர்


சூர்யாவுக்கு வில்லனாக இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியீடு ... தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ‘வாடிவாசல்’ இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இதையடுத்து இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி சில ஆண்டுகளே ஆகிவிட்ட நிலையில் இன்னும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்காமலே இருக்கிறது.

அதற்கு காரணம் வெற்றிமாறன் மற்றும் சூர்யா தாங்கள் இருவருமே கமிட்டாகி உள்ள படங்களை முடிக்காமல் இருக்கிறார்கள். இருவரும் தாங்கள் கமிட்டாகி இருக்கும் படங்களை முடித்த பிறகு வாடிவாசல் படத்தை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vetimaaran,vadivasal,actor surya,villain ,வெற்றிமாறன் ,வாடிவாசல் , நடிகர் சூர்யா,வில்லன்

இதன் இடையில், வாடிவாசல் படத்தில் நடிகர் அமீர் நடிப்பதாக முன்னதாகவே ஒரு தகவல் பரவி வந்த நிலையில் , அதை உறுதிப்படுத்தும் வகையில் வெற்றிமாறன் படத்தில் அமீர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்து உள்ளார்.அமீர் இயக்கும் ‘மாயவளை’படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அதில் சிறப்பு கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடிக்கிறார். வடசென்னை படத்தில் அவருடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு இருந்ததோ அதேபோலவே இந்த வாடிவாசல் படத்திலும் அவருடைய கதாபாத்திரம் இருக்கும் எனக் கூறியுள்ளார். எனவே, அவர் இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :