Advertisement

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் நாயகி இவர்தான்!

By: Monisha Fri, 22 May 2020 6:02:41 PM

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் நாயகி இவர்தான்!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இயக்குனர் வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நாயகியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் காயத்ரி சுதர்சன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்த வர்ஷா பொல்லம்மா தான் இந்த படத்தின் நாயகியாக நடிக்க உள்ளார்.

gv prakash,varsha pollamma,gautam menon,director mathimaran ,ஜிவி பிரகாஷ்,வர்ஷா பொல்லம்மா,கவுதம் மேனன்,இயக்குனர் மதிமாறன்

இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியின் ‘96’ படம் உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜி பிலிம் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :