Advertisement

இந்தியன் 2ன் மெயின் வில்லனே இவர்தானாம்... வெளியான தகவல்

By: Nagaraj Tue, 06 June 2023 8:05:34 PM

இந்தியன் 2ன் மெயின் வில்லனே இவர்தானாம்... வெளியான தகவல்

சென்னை: இந்தியன் 2 படத்தில் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தின் பிறகு கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். 2019ல் தொடங்கிய இப்படம், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா லாக்டவுன் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கியாரா அத்வானி நடித்த RC 15 ஐ ராம் சரண் தொடங்கினார். வாரிசு படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆர்சி 15 படத்தை தயாரிக்கிறது. இரு தயாரிப்பாளர்களிடமும் பேசி தனித்தனி ஷெட்யூல் போட்டு இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்குகிறார் ஷங்கர்.

indian-2,kamal haasan,sj suriya,villain,indian-2,sj suriya,kamal haasan,villain ,Indian-2, kamal haasan, SJ Suriya, Villain, இந்தியன்-2, எஸ்.ஜே.சூர்யா, கமல்ஹாசன், வில்லன்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் இந்த படத்தின் முக்கிய வில்லன் யார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த படத்தின் படப்பிடிப்பை எஸ்.ஜே. சூர்யா முடித்துவிட்டாராம். மேலும் இந்த கேரக்டருக்காக அவர் இதுவரை பெறாத அளவிற்கு அதிக சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :