Advertisement

சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருந்தது இவர்தானாம்

By: Nagaraj Tue, 22 Nov 2022 12:37:00 PM

சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருந்தது இவர்தானாம்

சென்னை: சிவாஜி படத்தில் வில்லனாக இவர்தான் நடிக்க இருந்தாராம்... பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.

விவேக், மணி வண்னன், வடிவுக்கரசி, ரகுவரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

rajini,shivaji,sathyaraj,suman,villain,character ,ரஜினி, சிவாஜி, சத்யராஜ், சுமன், வில்லன், கதாபாத்திரம்

சிவாஜி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அப்படத்தின் வில்லன் கதாபாத்திரம். ரஜினியின் சிவாஜி கதாபாத்திரத்துக்கு இணையாக ஆதிசேஷன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சுமன் நடித்திருந்தார்.

இந்நிலையில், சுமன் ஏற்று நடித்திருந்த இந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிகர் சத்யராஜ் தான் நடிப்பதாக இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் சத்யராஜ் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் சுமன் இப்படத்திற்குள் வந்துள்ளார். இந்த படத்தின் அதிரிபுதிரி வெற்றி அனைவரும் அறிந்த ஒன்று.

Tags :
|
|