Advertisement

சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியாவின் முதல் இசையமைப்பாளர்

By: Nagaraj Fri, 02 June 2023 11:13:54 AM

சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியாவின் முதல் இசையமைப்பாளர்

சென்னை: லண்டன் டிரினிட்டி மியூசிக் தொலைதூர கற்றலில் கிளாசிகல் கிதார் வாசிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் இளையராஜா.

லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்த ஆசியாவின் முதல் இசையமைப்பாளர் என்ற சிறப்பை பெற்றவரும் இவர்தான். இதனால்தான் இவர் மேஸ்ட்ரோ என்றும் புகழப்படுகிறார். திருவாசகத்துக்கு இவர் உருவாக்கிய சிம்பொனி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

2013 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் 100 வது ஆண்டை கொண்டாடும் சிஎன்என்-ஐபிஎன் கருத்துக்கணிப்பில் இந்தியாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல அமெரிக்க உலக சினிமா போர்ட்டல் ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ பட்டியலிட்ட 25 சிறந்த இசையமைப்பாளர்களில் உலக அளவில் 9 ஆவது இடம் பிடித்தார் இளையராஜா.

ilayaraja,maestro,honorary doctorates,national award ,இளையராஜா, மேஸ்ட்ரோ, கௌரவ டாக்டர் பட்டங்கள், தேசிய விருது

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் பின்னணி இசைக்கோர்வை உயிர்த்துவம் மிக்கது. இவரின் பின்னணி இசைக்காகவும், திரைப்பாடல்களுக்காகவுமே பல படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன என்பது உண்மை. இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மவிபூஷன் (2018) மற்றும் பத்மபூஷன்(2010) விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன.

இவர் இதுவரை இரண்டு தமிழ், இரண்டு தெலுங்கு, ஒரு மலையாளம் என மொத்தம் ஐந்து படங்களுக்காக தேசிய விருதை வென்றுள்ளார். இதுதவிர தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மத்திய பிரதேச அரசின் பல விருதுகளையும், இரண்டு கெளரவ டாக்டர் பட்டங்களையும் வென்றுள்ளார் இளையராஜா.

தமிழ்நாட்டை சுற்றிய மற்ற மாநிலங்களில் 70 களில் தொடங்கி இப்போது வரை இந்தி பாடல்கள் மிக பிரபலமாகவே உள்ளது. ஆனால் மற்ற மொழி பாடல்களை நோக்கி மனமே செல்லாத வகையில், தமிழர்களின் காதுகளில் தேன் சொட்ட சொட்ட தமிழை புகுத்திய பெருமை இளையராஜாவையே சேரும்.

Tags :