- வீடு›
- பொழுதுபோக்கு›
- வாரிசா, துணிவா? கேள்விக்கு அனாயச பதில் அளித்த பார்த்திபன்
வாரிசா, துணிவா? கேள்விக்கு அனாயச பதில் அளித்த பார்த்திபன்
By: Nagaraj Mon, 19 Dec 2022 10:04:22 PM
சென்னை: வாரிசு படத்தை முதலில் பார்க்கப் போகிறேன் என சொல்வதற்கே ஒரு துணிவு வேண்டும் என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக ஒதுக்க கூடாது. உதயநிதி ஸ்டாலினிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. அதன்பிறகு காவி நிறம் தொடர்பான சர்ச்சைகள் அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது.
இது போன்ற கலர் கலரான பிரச்சனைகள் வரக்கூடாது
என்பதுதான் என்னுடைய விருப்பம். வாரிசு போன்ற பெரிய படங்களுக்கு
பிரச்சனைகள் வந்தால் தான் அந்த படம் பிரபலமாகும்.
இந்த
பிரச்சனைகளை எல்லாம் விஜய் எப்படி கடந்து வருகிறார் என்பதும் ஒரு
ஹீரோயிசம் தான் என்றார். இந்நிலையில் நடிகர் பார்த்திபனிடம் வாரிசு மற்றும்
துணிவு திரைப்படங்களில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள் என்று
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு
நடிகர் பார்த்திபன் வாரிசு படத்தை முதலில் பார்க்கப் போகிறேன் என்று
சொல்வதற்கே ஒரு துணிவு வேண்டும் என்று கூறினார். மேலும் வாரிசு படத்தை
முதலில் பார்ப்பேன் என்பதை தான் நடிகர் பார்த்திபன் அப்படி கூறியுள்ளார்.