Advertisement

பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல் வெளியீடு குறித்த தகவல் இதோ

By: vaithegi Sat, 18 Mar 2023 3:05:30 PM

பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல் வெளியீடு குறித்த தகவல் இதோ

கடந்தாண்டு பொன்னியின் செல்வன் 1 பாகம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், 2-வது பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொண்டு வருகிறார்.

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் மொத்தம் 3 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதில் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா கடந்த சில நாட்களுக்கு முன்பு குந்தவையின் வீடியோவை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள்.

ponnis selvan,film ,பொன்னியின் செல்வன் , படம்

அதை தொடர்ந்து தற்போது ‘அகநக’ என்று தொடங்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வரும் மார்ச் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக குந்தவை மற்றும் வந்தியத்தேவன் இருக்கும் போஸ்ட்டரை வெளியீட்டு படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 4- ஆம் தேதி நேரு மைதானத்தில் வைத்து மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

Tags :