Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • 'லியோ' படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு

'லியோ' படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு

By: vaithegi Wed, 18 Oct 2023 12:30:45 PM

'லியோ' படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை.. உயர்நீதிமன்றம் உத்தரவு


இணையதளங்களில் வெளியிட தடை விதிப்பு ... நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் நாளை மறுநாள் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது.

websites,high court,leo ,இணையதளங்கள்,உயர்நீதிமன்றம் ,லியோ

இந்த நிலையில் 'லியோ' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ படத்தை சட்ட விரோதமாக 1,246 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

எனவே இதன் காரணமாக உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதையடுத்து நாளை வெளியாகும் லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சி அரசு அறிவித்தபடி காலை 9 மணிக்கு தொடங்கப்படும் என லியோ பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Tags :