Advertisement

சிம்புவுக்கு ஜோடியாக இந்தி நடிகையா?

By: vaithegi Sun, 14 May 2023 5:26:13 PM

சிம்புவுக்கு ஜோடியாக இந்தி நடிகையா?

பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல நடிகரான கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இதையடுத்து இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘STR48’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திற்காக சிம்பு நீளமான முடியுடன் இருக்கிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் இடையில், படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த தகவல் கசிந்துள்ளது.

simbu,jodi,deepika padukone ,சிம்பு,ஜோடி,தீபிகா படுகோனே

எனவே அதன்படி, இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி கொண்டு வருகிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இத்திரைப்படம் ஒரு இந்தியத் திட்டமாக இருப்பதால், தீபிகா படுகோனை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால், தமிழில் தீபிகா படுகோனே நடிக்கும் 2-வது படமாக ‘STR 48’ அமையும். இவர் ரஜினிகாந்துடன் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் கொல்லியூட்டில் அறிமுகமானார்.

Tags :
|
|