Advertisement

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு

By: vaithegi Mon, 20 Feb 2023 7:34:00 PM

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீடு

பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு ...... இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஹிப் ஹாப் ஆதி 'மீசையை முறுக்கு' படத்தை இயக்கி, கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு போன்ற படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி தற்போது 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் 'வீரன்' படத்தில் நடித்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி கொண்டு வருகிறது.

first look,the beginning of hip hop ,பர்ஸ்ட்லுக் ,ஹிப் ஹாப் ஆதி

இதையடுத்து பேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களை தயாரித்த 'சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்துள்ளது.

இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதியின் பிறந்தநாளான இன்று 'வீரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

Tags :