Advertisement

அமிதாப் மற்றும் அபிஷேக் புகைப்படங்களை பதிவு செய்த ஹாலிவுட் நடிகர்!

By: Monisha Mon, 13 July 2020 1:11:46 PM

அமிதாப் மற்றும் அபிஷேக் புகைப்படங்களை பதிவு செய்த ஹாலிவுட் நடிகர்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆராதித்யா ஆகிய நால்வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அமிதாப்பச்சனும் அவருடைய குடும்பத்தினரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பிரார்த்தனைகளை கேள்விப்பட்ட அமிதாப் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனக்காக பிரார்த்தனை செய்த அனைவரையும் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

amitabh bachchan,abhishek bachchan,corona virus,janasena,instagram ,அமிதாப்பச்சன்,அபிஷேக்பச்சன்,கொரோனா வைரஸ்,ஜான்சேனா,இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும் WWE விளையாட்டு வீரருமான ஜான்சேனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் புகைப்படங்களையும் பதிவு செய்து உள்ளார்.

அவர் இந்த பதிவில் வேறு எதையும் குறிப்பிடவில்லை என்றாலும் இருவரும் விரைவில் குணமடைய அவர் வாழ்த்து தெரிவித்தாகவே அவரது ரசிகர்கள் இந்த பதிவை எடுத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :