- வீடு›
- பொழுதுபோக்கு›
- நாட்டு நாட்டு பாடலை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
நாட்டு நாட்டு பாடலை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
By: Nagaraj Sun, 15 Jan 2023 3:12:19 PM
ஐதராபாத்: ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பாராட்டு...கோல்டன் குளோப் விருது வென்ற நாட்டு, நாட்டு பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூறியுள்ளார்.
இத்தகவலை அந்த பாடலின் இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்துள்ளார். ஆர்ஆர்ஆர் படம் உலக அளவில் பெரும் வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்திற்கு பெரும் பாராட்டுக்களும், விமர்சனங்களும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 80வது கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சிக்குப் பிறகு ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்தது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
அதில், சினிமாவின் கடவுளை சந்தித்ததாக ராஜமவுலி குறிப்பிட்டுள்ளார். ஸ்டீவன் ஸ்பீன்பெரக்கின் இந்த பாராட்டு படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.